Sunday, November 2, 2008

சங்கரன்கோயிலில் பஸ்சுக்கு தீ வைப்பு - பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

எனது அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து எழுதத்தொடங்கும் ‌நேரத்தில் சன் நியூஸ் சேனலை பார்த்தேன். தற்போது ஒரு பிளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. சங்கரன்கோயிலில் பஸ்சுக்கு தீ வைத்து விட்டார்களாம். நண்பர் ஒருவரிடம் கேட்‌டேன். புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி காரை நொறுக்குனத கண்டிச்சு இப்படி பஸ்சை கொளுத்திட்டாங்களாம்.

முதல் பதிவு சூடான... ஸ்பீடான பதிவா இருக்கணும்னு நினைச்சேன். இதுவும் சூடான செய்திப் பதிவுதானே?!

அனுபவங்களை எழுதலாமா??

இந்த வலைப்பூவை நான் ஆரம்பித்ததன் நோக்கம் திருநெல்வேலியின் சிறப்புகளை வலைப்பதிவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அதனால் எனது அனுபவங்களை எழுதலாம் என நினைத்திருக்கிறேன். எனது எழுத்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.